உலகின் மிகச் சிறந்த நகரஙகளின் பட்டியலில் ஐந்து கனேடிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த நகரங்கள் என்னும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறந்த 100 நகரங்களின் வரிசையில் கனடாவின் றொரன்டோ, கல்கரி, மொன்ட்ரயல், வான்கூவார் மற்றும் ஒட்டாவா ஆகிய நகரங்கள் இவ்வாறு சிறந்த நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.

முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறை என்பன தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வகைமை, கல்வி, அதிக எண்ணிக்கையிலான தலைமைக் காரியாலயங்கள் காணப்படும் நகரங்களில் றொரன்டோ கனடாவின் முதனிலையையும், உலக தர வரிசையில் 24ம் இடத்தையும் வகிக்கின்றது.

ரீசொனேன்ஸ் என்னும் ஆலோசனை நிறுவனத்தினால் இந்த தர வரிசை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

Von Admin