• Sa.. März 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் பலி!

Nov. 15, 2022

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் புத்தளம் உடப்பு பகுதியில் நேற்று (14) மாலை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் குடும்பஸ்தர் என்று தெரிவிய வந்துள்ளது.

உடப்பு பாரிபாடு கடற்கரையோரத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நால்வர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த நால்வரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழந்த நபரின் சடலம் உடப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed