• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சந்தையில் மீண்டும் வந்த முட்டைக்கு தட்டுப்பாடு

Nov 16, 2022

சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

அதேவேளை 50 ரூபாவிற்கு அதிகமாக முட்டை விற்பனை செய்பவர்களை கைது செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, வியாபாரிகள் முட்டை விற்பனையை நிறுத்தியுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கூறினார்.

இதன் காரணமாக திறந்த சந்தைகளில் தற்போது முட்டடைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed