மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு படம் பார்த்துக்கொண்டிருந்த 13 வயது மாணவன் கணினியின் சார்ஜர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நேற்று உயிரிழந்தார்.

கொபெயிதுடுவ பென்வல வீதி இடிகெட்டிய வீட்டில் வசிக்கும் செனடக் இதுவர என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலபிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த  மாணவன் நேற்று மதியம் கம்ப்யூட்டரில் சார்ஜரை பொருத்தி கணினியை பயன்படுத்தினார். அப்போது சார்ஜர் வெடித்து சிதறியது. படுகாயமடைந்த மாணவன் பலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்தார்.