வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் மற்றும் அனைத்து நாட்களிலும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரியும் நரசிம்மரை தரிசிப்பதற்காக ஆந்திரா கர்நாடகா உள்பட பல வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர் 1305 படிக்கட்டுகளில் நடந்து சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு கூடுதல் ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Von Admin