யாழ்ப்பாணம் வடமராட்சி கர்த்தகோவளம் பகுதியில் 18 வயது சிறுமி ஒருவர் கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிய போது மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி கல்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்து நண்பர்கள் நான்கு பேருடன் கடற்கரைக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியுடன் சென்றவர்கள் அலறியடித்ததையடுத்து அருகில் இருந்த இராணுவத்தினர் சிறுமியை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அலன்மேரி ஆனந்தராஜா வயது 18 என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Von Admin