• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது

Nov 25, 2022

 போலியான பாதுகாப்பு முத்திரையை பயன்படுத்தி ஓமான் செல்ல முயற்சித்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும்போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு முத்திரை பொய்யாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரே  இவ்வாறு ஓமன் நாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக  கூறப்படுகின்றது.

இந்நிலையில் கைதான யாழ் யுவதிகள் மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed