இந்த ஆண்டு இதுவரை இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பாதி பேர் அவர்களது நெருங்கிய துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நவம்பர் 7 வரை கொல்லப்பட்ட 95 பெண்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவர்களில் 27 வயதான கரோல், தனது முன்னாள் காதலனால் சுத்தியலால் தாக்கப்பட்டு, துண்டாக்கப்பட்ட உடலை ஒரு குன்றின் மீது வீசியதால் கொல்லப்பட்டார். 40 வயதான எலிசபெட்டா 12 முறை குத்தப்பட்டு இறந்தார்.

74 வயதான சில்வானாவை, அவரது கணவர் தடியால் அடித்து கொலை செய்துள்ளார். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி(Georgia Meloni), பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பயங்கரமான பெண் கொலைக்கு எதிராக போராடுவதற்கு தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பலருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், என்று அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இத்தாலியில், 31.5% பெண்கள் சில வகையான உடல் அல்லது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5.4% பேர் பலாத்காரம் போன்ற கடுமையான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தாலிய புள்ளியியல் நிறுவனம் இந்த விடயத்தினை (ISTAT) தெரிவித்துள்ளது.