இந்துக்களின் முக்கிய சிறப்பான நாடகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டடப்படுகின்றது.

அந்தவகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.இன்று மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதன்போது வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி,ஆலய முன்றலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நல்லூர் முருக பெருமான் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்திருந்தார்.