யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல் விமானம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வேதச விமான நிலையத்துக்கு வரவுள்ளது.

யாழ்- சென்னை இருவழி விமான பயணச் சீட்டு 62 ஆயிரம் ரூபா முதல் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சுங்க பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, 14 பேர் கொண்ட சுங்க ஊழியர்கள் இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் (பிராந்திய சேவைகள்) தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.