அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகருக்கு 22 கி.மீ. வடக்கு வடமேற்கே 9 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை(16) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்ச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் மாகாண வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகின்றது.

அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சக்தி குறைந்த பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.