• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் அதிரடிக் கைது

Dez 23, 2022

ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் நுழைய முயன்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது டிரக்கில் 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்குள் காணப்பட்டனர் சோதனைகளிற்கு பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் பங்களாதேஸ் எரித்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 21 முதல் 67 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நட்லாக் எல்லையில் ருமேனிய பிரஜையொருவர் செலுத்திய வாகனத்தை சோதனையிட்டவேளை இலங்கை பாக்கிஸ்தானை சேர்ந்த 21 வயது முதல் 42 வயதுடைய 11குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed