2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மதிப்பீட்டு பணிகள் நிறைவுற்றதும், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பரீட்சை முடிவுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 18 ஆம் திகதி நடைபெற்றது.

2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இப்பரீட்சைக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.