யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை பாராயணம் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை பாராயணம், இராமநாதன் வீதியூடாக கலட்டி சந்தியை அடைந்து, பாலசிங்கம் விடுதி ஊடாக தபால் பெட்டி சந்தி, பரமேஸ்வரா சந்தியை அடைந்து மீண்டும் பரமேஸ்வரா முன்றலில் பாராயணம் முடிவுற்றது.
இதன்பொழுது, அப் பகுதிகளில் உள்ள கோவில்களையும் தரிசித்த வண்ணம் பாராயணம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஜனவரி ஐந்தாம் திகதி திருவெம்பாவையை முன்னிட்டு, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் மார்கழி பெருவிழாவும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.