துருக்கியில் ஐடின் மாகாணம் நசிலி மாவட்டத்தில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மாலை 3.30 மணியளவில் ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டலில் உள்ள சிலிண்டரை மாற்ற ஊழியர்கள் முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Von Admin