யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் குறித்த இளைஞர் ஏமாற்றியதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.