அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

சாலையில் அதிவேகத்தில் வந்த வான் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வான் எதிரே வந்த மகிழுந்து மீது பயங்கரமாக மோதியது.

அதை தொடர்ந்து வானுக்கு பின்னால் வந்த மற்றொரு மகிழுந்து வான் மீது மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து நடந்த மோதலில் 3 வாகனங்களில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த தொடர் விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.