நிறைபோதையில் வீட்டுக்குவந்து மனைவியுடன் முரண்பட்ட குடும்பஸ்த்தர் தனது வீட்டுக்கு தானே தீ வைத்து கொழுத்திய சம்பவம் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வீடு பகுதியளவில் எரிந்துள்ளது. வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதையில் வீட்டிற்கு வந்து , மனைவி பிள்ளைகளுடன் சண்டையிட்டு , அவர்களை வீட்டின் வெளியே துரத்திவிட்டு வீட்டினை பூட்டி, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். வீட்டில் தீ பரவியதை அடுத்து அயலவர்கள் ஒன்று கூடி பலத்த சிரமத்தின் மத்தியில் தீயினை அணைத்தனர்.

இருந்த போதிலும் வீடு பகுதிகளவில் எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.