பிரான்ஸில் பாராசிட்டமால் சார்ந்த பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அங்கு விநியோகத் தட்டுப்பாடு தொடர்வதால், இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான மருந்துகளைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களாக பாராசிட்டமால் தயாரிப்புகளின் இருப்புக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

அதன்படி சுகாதார அதிகாரிகளால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், பயனுள்ளதாக இருந்த போதிலும் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என அரச ஆணையில் கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தடை நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு நோயாளிக்கும் விற்கும் பாராசிட்டமாலின் அளவை மருந்தகங்களுக்கு வழங்குமாறு பிரான்சின் தேசிய மருந்துகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.