• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாயில் இன்றிரவு இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை

Jan 21, 2023

கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் காவல்துறையினர் கூறினர்.

கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

முகமூடியணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed