அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (22.01. 2023) இடம்பெற்றுள்ளது.

இதில் பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கிழக்கே எட்டு மைல் தொலைவில் அமைந்துள்ள மான்டேரி பூங்காவில் பல்லாயிரக்கணக்கானோர் சீனா புத்தாண்டை கொண்டாட கூடியுள்ளனர்.

இதன்போது இனந்தெரியாத நபரொருவரால் குறித்த இடத்தில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்திருப்பதாகவும் சந்தேக நபரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பல வெடிமருந்துகளுடன் கூடிய இயந்திரத் துப்பாக்கியை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.