யாழில் மின்சார கட்டணம் நிலுவையிலுள்ள பாவனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (27.01.2023) இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ள அவர்,  எதிர்வரும் வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபா மீள் இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு, 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டுவதுடன், நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Von Admin