யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலில் இருந்த 35000 ரூபா பணமும், ஆலயத்தில் இருந்த அரிசி மூடைகள் மூன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதேவேளை வாகன திரித்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நாலரை(4.5) லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது .

குறித்த ஆலயத்தில் இடம் பெற்று வந்த வருடாந்த மாகோற்சபம் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin