• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் எரிவாயு விலை அதிகரிப்பு!

Feb 2, 2023

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை திருத்தம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைய  12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபா வரையும் அதிகரிக்கவுள்ளது ஆனால் லிட்ரோ நிறுவனம்  350 முதல் 400 ரூபாவினால் மட்டுமே விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed