இலங்கையில் கொனபொல கும்புக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையில் மோதி சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளானத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

(04) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேனோ தொழிநுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியும் கொனபொல கும்புக கிழக்கை வசிப்பிடமாக கொண்ட விமுக்தி பிரசாத் ஜயவீர என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சில அபிவிருத்திப் பணிகளின் பின்னர் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்த வீதித் தடுப்பு மற்றும் கொங்கிரீட் தரையின் மீது கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.