வடக்கு மாகாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது.

யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத ஒரு காலப்பகுதி என்பதால் மன்னாரில் இருந்து வடக்கு சந்தைக்கு கொண்டு வரப்படும் முருங்கையின் விலை உயர்ந்துள்ளது.

இருப்பினும், யாழ்ப்பாணத்தில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Von Admin