இத்தாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணபிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை இத்தாலிக்கான இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது.

இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் செய்யப்பட வேண்டும்.

அந்த தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் உள்ள தொழில் வழங்குனர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இந்த வேலைகளைப் பெற எந்தவொரு நபருக்கும் பணம் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.