யாழ்ப்பாணம், சாவகச்சேரி- சரசாலையை சொந்த இடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நீண்ட காலமாக குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் வியாபாரம் மற்றும் சமூக சேவைகளில் பிரபலமானவர் என்று தெரியவருகின்றது.

சம்பவத்தில் சாவகச்சேரி சரசாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்கைளின் தந்தையான கந்தசாமி பிரபாகரன் (வயது -40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin