இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் மூளாய் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை மோட்டார் சைக்கிளுடன் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.