800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 450 நடத்துனர்களுக்கான பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிட்ட லலித் டி அல்விஸ் புதிய ஆட்சேர்ப்பு மூலம் வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என தெரிவித்தார். 

Von Admin