காங்கேசன் துறைமுகம் – காரைக்கால் துறைமுகம் இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி படகுச் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் சண்டே ரைம்ஸிடம் தெரிவித்துள்ளர்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள், பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும்எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த படகுப் பயணமானது 04 மணித்தியால பயண நேரம் என்பதுடன் பயணி ஒருவர் 100 kg பொதி வரை கொண்டு செல்ல முடியும் இதற்கான ஒருவழிக்கட்டணமாக 50 அமெரிக்க டொலர் அறவிடப்படம் என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Von Admin