வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர பாற் காவடி பவனி இன்று(05) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்றைய தினம் பங்குனி உத்திர திருவிழா ஆலயங்களில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

முருகப்பெருமான் – தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதார தினம், சுவாமி ஐயப்பனின் அவதார தினம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது பங்குனி உத்திர தினம்.

இந்த நாளில்தான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்பது ஐதீகம் இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்றாக சொல்லப்பட்டாலும், இந்த நாள் தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள்.அதனால் தான் பங்குனி உத்திர விரதத்திற்கு கல்யாண விரதம், மங்கல விரதம், கல்யாண சுந்தர விரதம் போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம்.அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழா நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பாக இடம்பெற்றது.  

Von Admin