கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்கள் நீண்ட காலமாமக கிடப்பில் போடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவர், பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாது சில ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய ஊடகங்கள் இந்த விடயம் பற்றிய விபரங்ளை வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்களைத் தொடர்ந்து வி;ண்ணப்பங்களை பரிசிலனை செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்கம், அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இது குறித்த அவசர மின்னஞ்சல்கள் பல்வேறு மட்டங்களிலும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே பரிசீலனை செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த குடிவரவு ஆவணக் கோப்புகள் வேறும் உத்தியோகத்தர்களிடம் பொறுப்பளிக்பபட்ள்ளது.

கனடாவில் ஏதிலி அந்தஸ்தினை பெற்றுக்கொள்வதற்காவும் மற்றும் குடியேற்றம் தொடர்பிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Von Admin