சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வாடகைகள் இப்போது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக Homegate என்னும் சுவிஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக, கடந்த ஆண்டில் வீட்டு வாடகைகள் 2.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

வீடுகளின் வாடகை வீதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிடும் Swiss rent index, முந்தைய மாதத்தைவிட 0.3 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சமாக 120.2 புள்ளிகளாக உயர்ந்துள்ளது

கடந்த மாதம் 18 சுவிஸ் மாகாணங்களில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. சூரிச்சில் அதிகபட்சமாக 7.3 சதவிகிதமும், Luganoவில் 6.4 சதவிகிதமும் வாடகைகள் அதிகரித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் பெரிய நகரங்களைப் பொருத்தவரையில் சூரிச், Bern மற்றும் ஜெனீவாவில் வாடகைகள் அதிகரித்துள்ளன, பேசல், Lausanne மற்றும் Luganoவில் வாடகைகள் குறைந்துள்ளன.

Von Admin