• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை!

Mai 12, 2023

கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட தாம் வீதி, செட்டித்தெரு போன்ற பகுதிகளில் தங்கியுள்ளவர்களைப் பதிவு செய்யுமாறு பொலிஸாரினால் படிவமொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உடனடியாக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பில் வினவியபோது, அவ்வாறு எந்தவித பதிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லையென புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (12.05.2023) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  கேள்வியெழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed