• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் ஓட்டப்பந்தய போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை தமிழர்

Mai 15, 2023

Grand Prix Von Bern ஊடாக சுவிட்சர்லாந்தில் (13.05.2023) ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன், 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 வயதுடைய முருகவேல் பொன்னம்பலம் என்பவர் கலந்துக்கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

இவர் கிளிநொச்சி-பூநகரி பகுதியை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஆவார்.

249 பேர் பங்குபற்றிய இந்த ஓட்டப்போட்டியில் முருகவேல் பொன்னம்பலம், 124 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 4.7 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்கள் 15 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.

இந்த வயதில் ஓட்டப்போட்டியில் உற்சாகமாக கலந்துக்கொண்டு பதக்கம் பெற்ற முருகவேல் பொன்னம்பலத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed