அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மருத்துவபரிசோதனைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞன் வேறு ஒருபகுதியில் நீரில் தவறிவிழுந்திருக்கலாம் அவரது உடல் இந்த பகுதிக்கு அடித்துவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Von Admin