யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்  உயிர்பிழைக்க  பிரான்ஸ் சென்ற யாழ் இளைஞர் விபரீத முடிவால்   உயிரிழந்த சம்பவம்  பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Von Admin