• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வைகாசிப்பொங்கல்!

Juni 5, 2023

வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி வழிபடும் தலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தும் அதிசய ஆலயம் என்ற பெருமையோடு முல்லைத்தீவு நந்திக் கடலோரம் கண்ணகித்தாய் வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு இருக்கின்றாள்.

வைகாசிப் பொங்கல் விழா

வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு இன்று (05) திங்கள் கிழமை வைகாசிப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இன்றைய நாள் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்து கண்ணகி அம்மனை வழிபடுகின்றார்கள்.

அதிகாலை நான்கு மணியில் இருந்து பூசைகள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் அதிகாலையில் இருந்து நண்பகல் ஒரு மணிவரை 4 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தினை தரிசித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed