பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்

மத்திய பாரிசில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகரில் ஐந்தாவது வட்டாரத்தில்  இல் கத்தோலிக்க பாடசாலை மற்றும் டிசைன் கல்லூரிக்கான கட்டிடத்திலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவர் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படும் நிலையில் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் எரிவாயு மணத்தை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவலாயத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளேயே வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக  பிரான்ஸ் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்பிற்கான காரணத்தை இன்னமும் தீர்மானிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் இடிபாடுகளின் கீழ் சிக்குண்டிருக்ககூடியவர்களை கண்டுபிடிக்க மோப்பநாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நான் பாரிய சத்தமொன்றை கேட்டேன் பின்னர் இருபது 30 மீற்றர் உயரத்திற்கு பாரிய தீப்பிளம்பை அவதானித்தேன் கட்டிடம் பாரிய சத்தத்துடன் இடிந்து விழுந்தது எரிவாயுவின் மணத்தை உணரமுடிந்தது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

Von Admin