பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரொரன்ரோவை சேர்ந்த ஈழத் தமிழ் பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

Sussex நகரின் Chichesterக்கு அண்மையில் உள்ள Duncton என்னும் இடத்தில் A285 பாதையிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றது விபத்தில், கனடாவில் இருந்து சென்ற இந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் இவர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்த சுபத்திராவின் மகன் உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிற்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.   

Von Admin