ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக இலங்கையர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹாட்லிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு உயர்தர மாணவரும், யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான கந்தசாமி விக்னரூபன் என்பவரே பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் யாழ்ப்பணம் பருத்தித்துறை, வரணியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக தெரிவு செய்யப்பட்டு தமிழர் என்ற ரீதியில் பெருமிதம் சேர்த்துள்ளார். 

Von Admin