அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத்  தாக்கி அவரின் பணப்பையைத்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இன்று காலை 3.45 மணியளவில் வீதியில் பயணித்த ஒரு பெண்ணை கூறிய ஆயுதத்தால் தாக்கி அவரின் பணப்பையை அறுத்துத்  திருடிச்  சென்றுள்ளனர்.

குறித்த பெண் யாழ் நல்லூர் திருவிழாவிற்கு சென்று கொழும்பு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன் போது குறித்த பெண் உதவி கேட்டு அலறும் சத்தம் பலரின் காதுகளுக்கு கேட்ட போதிலும் உதவி செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் குறித்த இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் தெரிய வருகின்றது.

ஆகவே வெளிநாடுகளில் இருந்தும் வெளிப்பிரதேசங்களில் இருந்தும் வருகை தருவோர் பாதுகாப்பான முன் ஆயத்தங்களை செய்துக்கொள்ளுமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாலையில் வரும் பயணிகளை குறிவைத்தே இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் ஆகவே பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் தங்கள் பயணங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Von Admin