• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழர் பகுதியில் ஜந்து பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

Sep 18, 2023

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியைச் சேர்ந்த 44 வயதான செ.மகேந்திரம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.

அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்தார் எனவும் அதற்கு பின்னர் வழமை போல சாதாரண நிலையில் இருந்ததாக அவரது மனைவியால் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது மூளையில் இரத்தக் கசிவு இருப்பதாக தெரிவித்து, சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed