• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல்!!

Feb. 21, 2024

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வழிமறித்த வன்முறை கும்பல் வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவ்வேளை, சாரதி எழுப்பிய அவலக்குரல் கேட்டு அருகிலுள்ள மக்கள் ஒன்று கூடியதால் வன்முறைக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

யாழ் வேம்படி மகளீர் கல்லுாரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!

சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed