• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த தமிழ் புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்!

Apr 14, 2024

தமிழ் புத்தாண்டு நேற்றிரவு (13-04-2024)  8 மணிளவில் பிறந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி பெருகும்! இன்றைய ராசி பலன் (14.04.2024)!

60 தமிழ் ஆண்டுகளில் 38 ஆவது தமிழ் ஆண்டு தான் குரோதி ஆண்டு. 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் ஏப்ரல் 14 ஆம் திகதி பிறக்கிறது.

இந்த தமிழ் புத்தாண்டின் போது, கிரகங்களின் நிலைகளால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும்.   

யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா 2024

இதன்படி, குரோதி தமிழ் புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

இப்போது குரோதி தமிழ் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் பார்க்கலாம்.

மிதுனம்: குரோதி தமிழ் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

சிட்னியில் துப்பாக்கி சூடு – கத்திகுத்து தாக்குதல்! 6-பேர் பலி.

வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். முதலீடுகளால் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு இந்த குரோதி ஆண்டு சிறப்பாக இருக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

கடகம்: குரோதி தமிழ் புத்தாண்டானது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைகளை சிறப்பாக முடித்து பாராட்டுக்களைப் பெறுவார்கள். முக்கியமாக சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வியாபாரிகள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இது பிற்காலத்தில் உதவியாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரகமாக எதிர்பார்த்தப்படியே முடிவடையும்.

விருச்சிகம்: குரோதி தமிழ் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனையே வராது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது.

முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். சிலர் சொந்தமாக தொழிலை தொடங்க வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு: குரோதி தமிழ் புத்தாண்டில்தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்: குரோதி தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையையும் பெறுவார்கள்.

எதிரிகளின் சதியை முறியடித்து, உங்கள் வேலையை சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இதுவரை ஏதேனும் ஒரு நோயால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஆண்டில் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முழு ஈடுபாட்டுடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed