• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தென்னிலங்கையில் கோர விபத்து. சிறுமி உட்பட 7 பேர் உயிரிழப்பு!

Apr. 21, 2024

பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் சிறுமியொருவர் உட்பட  07 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்

பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்த 20 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏரியில் மீன் பிடிக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்! –

இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed