• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பாணினுள் காணப்பட்ட கண்ணாடி துண்டுகள்!

Mai 22, 2024

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் , சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  1. தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்.
  2. நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்

மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது , பாணினுள் இருந்து உடைந்த போத்தல் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டுள்ளன.

அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து அவர் முன்னெடுத்த விசாரணைகளில் கடைக்கு பாண் விநியோகம் செய்தது , சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் என தெரிய வந்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் சிவப்பு எச்சரிக்கை!

அதனை அடுத்து குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed