• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை

Mai 26, 2024

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்ற விநாயகர் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி வரும் ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 26 ஆம் திகதி வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)

 சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விநாயகப் பெருமானை வழிபடாத நபர்களையே இருக்க முடியாது. எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டு தான் பலரும் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிக்கும் செயலானது எந்தவித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாகவே நடைபெறும்.

வெளியான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி

ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய இந்த சங்கரஹர சதுர்த்தி நாளன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாகவோ அல்லது சிலைக்கு முன்பாகவோ ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். 

4 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)

பகலில் உறங்க கூடாது. மேலும் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. திரவ உணவுகளாக உட்கொள்வது நல்லது. உடல் நலம் சரியில்லாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்கலாம். மாலையில் ஆறு மணிக்கு மேல் விநாயகப் பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அருகம்புல்லை வாங்கி வந்து மாலையாக தொடுத்து விநாயகப் பெருமானுக்கு சாற்ற வேண்டும்

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை | Sangadahara Chaturthi Ritual Which Solves Dilemmas

வெள்ளருக்கு பூ கிடைத்தால் அதையும் வைக்கலாம். பிறகு அவருக்கு நெய்வேத்தியமாக கொழுக்கட்டை படைக்க வேண்டும். கொழுக்கட்டை செய்ய இயலாதவர்கள் சுத்தமான தேனை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு விநாயகரின் இந்த பாடலை அவருக்கு முன்பாக அமர்ந்து 21 முறை மனதார கூற வேண்டும்.

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை | Sangadahara Chaturthi Ritual Which Solves Dilemmas

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed