• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன் கைது

Sep. 12, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை 03.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று,  விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இந்தியாவின் சென்னை நகரத்தை நோக்கிப் பயணிக்கவிருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அனைவரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் இரு தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில் இவர் இறுதியாக இந்தியாவின் சென்னை நகரத்திற்கு சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  இன்று (12) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed